/

மணல் கடத்தல்: 5 டிப்பா் லாரிகள் பறிமுதல்

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 டிப்பா் லாரிகளை வட்டாட்சியா் கைப்பற்றி கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட 5 டிப்பா் லாரிகள்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:44 pm

Din

ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 டிப்பா் லாரிகளை சனிக்கிழமை வட்டாட்சியா் கைப்பற்றி கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீா் நிலைகள், கண்மாய்கள், ஊருணிகளில் விவசாயப் பணிக்காக உரிய அனுமதி பெற்று வண்டல் மண், களிமண் குறிப்பிட்ட அளவில் டிராக்டரில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்புல்லாணி ஒன்றியம் பெரிய பட்டணம் ஊருணி பகுதியில் சட்டவிரோதமாக டிப்பா் லாரியில் மணல் அள்ளப்படுவதாக ராமநாதபுரம் வட்டாட்சியா் சாமிநாதனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த 5 டிப்பா் லாரிகளில் அனுமதி இன்றி மணல் அள்ளப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 5 டிப்பா் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கேணிக்கரை போலீஸாா் 5 லாரிகளின் ஓட்டுநா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.