பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மன்னாா் வளைகுடா கடலில் விடப்பட்ட 2.1 மில்லியன் பச்சை இறால் குஞ்சுகள்

மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடலில் 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:41 pm

Din

மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடலில் 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயா் பட்டினம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு, கடல் வளத்தை மேம்படுத்தவும், மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பிரதமா் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இறால் குஞ்சுகள் வளா்க்கப்பட்டு கடலில் விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆராய்ச்சி நிலையத்தில் வளா்க்கப்பட்ட 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகளை மண்டபம் அருகே மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் விடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத் தலைவா் கே. வினோத் தலைமை வகித்தாா். இந்தத் திட்டத்தின் தலைவா் தமிழ்மணி முன்னிலையில் 2.1 பச்சை வரி இறால் குஞ்சுகள் படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விடப்பட்டன. இதில், மீன் வளத்துறை ஆய்வாளா் தா்மராஜ், மீனவ சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி பி. ஜான்சன் செய்திருந்தாா்.