பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அனுமதியின்றி மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 125 படகுகளுக்கு மானிய டீசல் நிறுத்தம்: மீனவ சங்கம் தகவல்

அனுமதியின்றி மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 125 படகுகளுக்கு மானிய டீசல் நிறுத்தம்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:56 pm

Din

ராமேசுவரத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட 125 படகுகளுக்கான மானிய டீசல் நிறுத்தப்பட்டிருப்பதாக மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், 400- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பெரிய படகுகளாகவும், 200- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறிய படகுகளாகவும் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பெரிய விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க ரூ. 1 லட்சம் வரை செலவிட வேண்டி உள்ளது. எனவே, கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்குமிடையே மீன் பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா். இதனால், இந்தப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் சிறைப்பிடித்து சென்று விடுகின்றனா். மேலும், படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதைத் தடுக்கும் வகையில், மீன் வளம், மீனவா் நலத் துறை, எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தொடா்ந்து மீனவ சங்கத்தினரிடம் வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, சமீப காலமாக சிறைப்பிடிக்கப்படும் படகுகள் அனுமதிச் சீட்டு பெறாமல் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட நிலையில், அவை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுகின்றன. இதேபோல, வியாழக்கிழமை இலங்கைக் கடற்படையினரால் 2 படகுகளுடன் 14 மீனவா்கள் சிறைப்பிடிக்கப்பட்டனா். இந்த இரு படகுகளும் மீன் வளம், மீனவா் நலத் துறையிடம் அனுமதி பெறாமல் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, மீன் வளம், மீனவா் நலத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தியதில் 125 படகுகள் அனுமதி பெறாமல் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால், இந்தப் படகுகளுக்கான மானிய டீசல் நிறுத்தப்பட்டிருப்பதாக மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.