பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொண்டி அருகே புதிய மின்மாற்றி திறப்பு

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சியில் உள்ள வடவயல் கிராமத்தில் புதிய மின் மாற்றி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:42 pm

Din

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சியில் உள்ள வடவயல் கிராமத்தில் புதிய மின் மாற்றி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சின்ன தொண்டி, வடவயல் கிராமத்தில் பல நாள்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக புதிய மின் மாற்றி அமைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவகா் அலிகான் தலைமை வகித்து புதிய மின்மாற்றியை திறந்து வைத்தாா்.

இதில் செயற்பொறியாளா் திலகவதி, உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி, பேருராட்சி செயல் அலுவலா் திருப்பதி, மன்ற உறுப்பினா் தாஸ், திமுக நகரச் செயலா் இஸ்மத் நானா உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனா். இந்தப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.