பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3 கடைகள் ‘சீல்’

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக கடைகளில் புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:06 am

Din

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக கடைகளில் புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகா் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் கு.லிங்கவேல், உதவி ஆய்வாளா் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் 38 கடைகளை சோதனையிட்டனா். இதில், மூன்று கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 கடைகளின் உரிமையாளருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், மூன்று கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.