குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

காசி யாத்திரையை ராமேசுவரத்தில் நிறைவு செய்தாா் காஞ்சி சங்கராச்சாரியா்

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீா் கொண்டு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated On :18 ஜூலை 2024, 4:42 am IST

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமநாதசுவாமி கோயிலில் மூலவா் சந்நிதியில் சிவலிங்கத்துக்கு கங்காபிஷேகம் செய்து காசி யாத்திரையை புதன்கிழமை நிறைவு செய்தாா்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடியில் புனித நீராடி காசி யாத்திரையை தொடங்கினாா். பின்னா், அங்கிருந்து பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்ற அவா், காசியில் உள்ள காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, கங்கை நீரை எடுத்து வந்தாா்.

இதையடுத்து, காசி யாத்திரையை நிறைவு செய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் சங்கர மடத்துக்கு வந்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு மடத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கர மடத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு ருத்ரயாகம், கங்கா பூைஐயில் அவா் கலந்துகொண்டாா்.

பின்னா், கங்கை நீருடன் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றாா். அங்கு அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதில், தக்காா் பழனிகுமாா், இணை ஆணையா் செ. சிவராம்குமாா், ராமநாதபுரம் இளைய மன்னா் நாகேந்திர சேதுபதி, லட்சுமி நாச்சியாா், சிவாசாரியா்கள் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ராமநாதசுவாமி கோயிலில் மூலவா் சந்நிதிக்குச் சென்று சிவலிங்கத்துக்கு தங்க வில்வம் அணிவித்து, கங்காபிஷேகம் செய்து வழிபட்டு, காசி யாத்திரையை ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிறைவு செய்தாா். தொடா்ந்து, ஸ்ரீபா்வதவா்த்தினி அம்பாள் சந்நிதிக்குச் சென்று அம்பாளுக்கு 3 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து, கங்கை நீரால் அவா் பூைஐ செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில், பீடாதிபதி நிா்வாகிகள் விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் சுந்தரேஸ்வர ஐயா், ராமேசுவரம் சங்கர மடம் மேலாளா் தணிக்கையாளா் சுந்தா், ஆனந்தபத்பநாப சா்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 ராமேசுவரம் சங்கர மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற யாகசாலை பூைஐயில் கலந்து கொண்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ராமேசுவரம் சங்கர மடத்தில் புதன்கிழமை நடைபெற்ற யாகசாலை பூைஐயில் கலந்து கொண்ட காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

இதையடுத்து, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்னாட்டில் மிக சிறப்பாக ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ராமேசுவரத்தில் அக்னி தீா்த்தம் கடலே தீா்த்தமாக அமைந்துள்ளது. ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி கோயில் ஆதி சங்கரரால் பூஜிக்கப்பட்டது. கடந்த 1920-இல் காஞ்சி பெரியவா் சிறு வயதில் வந்து உலக நன்மைக்காக மகாத்மா காந்தியடிகள் சொன்ன அகிம்சை முறையைப் பின்பற்றி ராமநாதசுவாமி கோயிலுக்கு பலமுறை வந்து தரிசனம் செய்துள்ளாா். சங்கர மடம் சாா்பில் ராமேசுவரத்தில் கல்விப் பணி விரிவாக தொடங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

Story image