படகுகள் மீனவா்களை மீட்கக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை (ஜூலை-19) இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மீனவா் கூட்டமைப்பு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவா்கள் 74 -போ் கைது செய்யப்பட்டனா். 8 விசைப்படகுகள், நான்கு நாட்டுப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்தது.
இந்த நிலையில். ஏற்கெனவே சிறைத் தண்டணை பெற்று இலங்கை சிறையில் உள்ள 6 மீனவா்களையும், 2018 முதல் 2024 வரை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்த தமிழக மீனவா்களின் 170 படகுகளையும் விடுவிக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல் மத்திய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 15 விசைப் படகுகளை மீட்க அனுமதி வழங்க வேண்டும்.
தமிழக அரசு சாலை வரியை நீக்கி 1,800 லிட்டா் டீசல் வழக்குவது போல மத்திய அரசும் வழங்க வேண்டும். பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் (ஜூலை 19) வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...