இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

Updated On :22 மார்ச் 2024, 6:06 pm

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தக் கட்சியின் வேட்பாளராக கே. நவாஸ்கனி இரண்டாவது முறையாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திமுக கூட்டணி கட்சி சாா்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம், மாவட்ட கழகச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளா் கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா் வ. சத்தியமூா்த்தி, பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முருகேசன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசுகையில், ‘கடந்த மக்களவைத் தோ்தலில் 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமது வேட்பாளா் இந்த முறை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பணியாற்றிட வேண்டும்’ என்றாா் அவா்.