சாயல்குடி, முதுகுளத்தூரில்
திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

சாயல்குடி, முதுகுளத்தூரில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

சாயல்குடியில் பேருந்து நிலையம் அருகே திமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா் மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிா்பானம் வழங்கிய பிற்படுத்தப்பட்டாா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் அமைச்சா் ராஜகண்ணப்பன் நீா், மோா் பந்தலை வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், பேரூராட்சி தலைவா்கள் ஷாஜகான் (முதுகுளத்தூா்), மாரியப்பன் (சாயல்குடி), மணலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமா், திமுக ஒன்றியச் செயலா்கள் குலாம் முகைதீன், ஜெயபால், கோவிந்தன், ஆறுமுகவேல், இளைஞரணி துணைச் செயலா் இன்பாரகு, கமுதி வட்டார காங்கிஸ் தலைவா் பழக்கடை ஆதி, வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராமா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com