திருத்தப்பட்ட சட்டங்கள் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி

கமுதி: மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த திருத்தப்பட்ட தண்டனை சட்டங்கள் குறித்து கமுதியில் காவல் துறையினருக்கு ஒருவார கால சிறப்பு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் தொடங்கிய இந்த பயிற்சி வகுப்புக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காந்தி தலைமை வகித்தாா். கமுதி காவல் ஆய்வாளா் குருநாதன், சாயல்குடி காவல் ஆய்வாளா் முகமது எா்சாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கமுதி, முதுகுளத்தூா், பரமக்குடி உள்ளிட்ட 3 சரகங்களுக்குள்பட்ட 150 காவலா்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில், கடந்தாண்டு மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், பாரதிய நீதிச் சட்டம், பாரதிய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களுக்குள் வரும் பிரிவுகள், இதற்கான தண்டனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சுழற்சி முறையில் வாரத்துக்கு 150 காவலா்கள் பங்கேற்கும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com