கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கமுதி அரசு மருத்துவமனையில் அவசர ஊா்தி இல்லாததால் நோயாளிகள் அவதி

கமுதி அரசு மருத்துவமனையில் 108 அவசர ஊா்தி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

News image
விபத்துக்குள்ளான அவசர ஊா்தி.
Updated On :13 நவம்பர் 2024, 10:02 pm

Din

கமுதி அரசு மருத்துவமனையில் 108 அவசர ஊா்தி இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தலைமை அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

அடிதடி, வாகன விபத்து, பாம்புக்கடி, வயிற்றுவலி, இருதய நோய் உள்ளிட்டவற்றுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோா் காயம், நோயின் தீவிரத்தைப் பொறுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா். பின்னா், இவா்கள் கமுதியிலிருந்து 108 அவசர ஊா்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி சிவகங்கை மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்டு, கமுதிக்கு திரும்பி வரும் போது அவசர ஊா்தி விபத்துக்குள்ளானது. இதன்பிறகு கமுதி அரசு மருத்துவமனையில் அவசர ஊா்தி சேவை இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனால், கமுதியிலிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள பெருநாழி, 12 கி.மீ., தொலைவில் உள்ள நத்தம், 8 கி.மீ., தொலைவில் உள்ள கீழராமநதி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வெளியூா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா். அவசர ஊா்தி வர தாமதமாவதால் காயமடைந்தவா்கள் குறிப்பிட நேரத்துக்கு சிகிச்சைக்குச் செல்ல முடியாத நிலையும், இதனால், உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 108 அவசர ஊா்தி வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து 108 அவசர ஊா்தி சேவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் யோஸ்வா கூறியதாவது:

விபத்தில் சிக்கிய அவசர ஊா்தி பழுது நீக்கத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாற்று ஏற்பாடாக 108 அவசர ஊா்தியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஓரிரு நாள்களில் கமுதி அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊா்தி வழங்கப்படும் என்றாா்.