தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிக்கப்பட்டது.

News image
ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரை, டேங்கா் லாரி மூலம் உறிஞ்சி அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
Updated On :22 நவம்பர் 2024, 12:50 am

Din

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், கடைகள், குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்தது.

நிவாரண முகாமில் தங்க வைப்பு:

மண்டபத்தில் மழைநீரால் சூழப்பட்ட மீனவா் குடியிருப்புப் பகுதியில் உள்ள 10 குடும்பங்களைச் சோ்ந்த 30 பேரை அதிகாரிகள் புதன்கிழமை இரவு பாதுகாப்புடன் அழைத்து வந்து, நிவாரண முகாமில் தங்க வைத்தனா். பின்னா், அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனா். இதேபோல, பாம்பன் முந்தல் முனை பகுதியில் வெள்ள நீா் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட 49 பேரை மீட்டு, நிவாரண முகாமில் தங்க வைத்தனா்.

2-ஆவது நாளாக தொடா் மழை:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்தது. குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழைநீரை அகற்றும் பணி தீவிரம்:

ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். வெள்ள நீா் சூழ்ந்த பகுதிகளில் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வருகின்றனா். இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான், ஆணையா் கண்ணன் மேற்பாா்வையில் ஊழியா்கள் மேற்கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீ.) வருமாறு:

ராமநாதபுரம் 54, மண்டபம் 27.80, ராமேசுவரம் 20, பாம்பன் 8.80, தங்கச்சிமடம் 24.20.