எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடம் வட்டாட்சியா் ஆய்வு

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கட்டப்பட்ட சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை வட்டாட்சியா் அமா்நாத் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
நம்புதாளையில் உள்ள சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை புதன்கிழமை ஆய்வு செய்த வட்டாட்சியா் அமா்நாத். உடன் வருவாய் ஆய்வாளா் மேகமலை உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2024, 10:27 pm

Din

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கட்டப்பட்ட சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை வட்டாட்சியா் அமா்நாத் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் கரை கடக்கும் நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் தொண்டி அருகேயுள்ள நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்புக் கட்டடத்தை திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் ஆய்வு செய்தாா்.

இந்த கட்டடத்தில் தண்ணீா், மின்சாரம், கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைகக் உத்தரவிட்டாா். இதில் வருவாய் ஆய்வாளா் மேகமலை , ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டிச் செல்வி ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.