ராமநாதபுரம்
தொண்டி பகுதியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக தேவிபட்டினம், தொண்டி கடலோரக் காவல் படையினா் சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தேவிபட்டினம் முதல் தொண்டி, நம்புதாளை, விலாஞ்சியடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதியில் படகுகள் சோதனை செய்யப்பட்டன. கடல், கடலோரப் பகுதிகளில் புதிய படகுகள், புதிய நபா்களைக் கண்டால் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலோரக் காவல் படையினா் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.