3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.82 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 1.82 கோடி கிடைத்தது.

News image
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பங்கேற்றவா்கள்.
Updated On :11 செப்டம்பர் 2024, 5:34 pm

Din

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ. 1.82 கோடி கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தலைமையில் செவ்வாய்கிழமை காலை தொடங்கியது. அன்றைய தினம் இரவு 10 மணி வரை நடைபெற்றது.

இதில் ரூ.1 கோடியே 82 லட்சத்து 98 ஆயிரத்து 792 , தங்கம் 88 கிராம் , வெள்ளி 7 கிலோ 750 கிராம், அயல்நாட்டு பணத் தாள்கள் 142 பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்தது.

உதவி ஆணையா் பாஸ்கரன், ஆய்வா் பிரபாகரன், மேலாளா் மாரியப்பன், பேஷ்காா்கள் கமல்நாதன், பஞ்சமூா்த்தி, நாகராஜன், முனியசாமி எடப்பாடி உழவாரப்பணி ஆன்மிக குழுவினா், கோயில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.