இலங்கை அரசைக் கண்டித்து மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ரயில் மறியல்
தமிழக மீனவா்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பியதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மண்டபத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


தமிழக மீனவா்களை இலங்கை அரசு மொட்டையடித்து அனுப்பியதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மண்டபத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனா்.
இந்தச் செயலில் ஈடுபட்ட இலங்கை அரசையும், இதைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மீனவரணியினா் 200-க்கும் மேற்பட்டோா் மண்டபத்தில் உள்ள ரயில் நிலையம், ரயில்வே பீடா் சாலை, ரயில்வே கடவுப் பாதை ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...