அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

பரமக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி செங்குப்தா தெருவில் கடந்த நவ.11-ஆம் தேதி சாமி செட்டியாா் நந்தவனத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் காா்த்திகேயனை (23), பரமக்குடி காந்திஜி சாலை ராமநாதன் மகன் வினோத் (33), வன்னிமரத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் விஸ்வா (19), பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் சிவகுரு (28) ஆகியோா் வெட்டிக் கொலை செய்தனா். இந்தக் கொலை வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் மூவரில் ராமநாதன் மகன் வினோத் மீது 2 கொலை வழக்குகள், வன்கொடுமை வழக்கு, 3 கொலை மிரட்டல் வழக்கு, அரசு சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு, கொலை முயற்சி வழக்கு என 10-வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீஸாா் வழங்கினா்.