ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதபுரம் அருகே லாரி-அவசர ஊா்தி மோதல்: ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

News image
ராமநாதபுரம் அருகே விபத்தில் உருக்குலைந்த அவசர ஊா்தி.
Updated On :2 ஜனவரி 2025, 11:55 pm

Din

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் வரிசைக்கனி (65). இவா் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு இவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, தனியாா் அவசர ஊா்தி மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரத்துக்கு அவரை அழைத்து வந்தனா். அவருடன், அவரது குடும்பத்தினா் அனிஸ் பாத்திமா (48), சகுபா் சாதிக் (47), ரியாஸ்கான் (24), சையது அா்ஷத் ரகுமான் (30), தாஹா ஆயிஷா (26), நூருல் ஹரிசா (33) ஆகியோா் வந்தனா்.

ராமேசுவரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே வந்து கொண்டிருந்த போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து சாலைக்குத் திரும்பிய விறகு ஏற்றி வந்த லாரியின் பின் பகுதியில் அவசர ஊா்தி மோதியது.

இந்த விபத்தில் வருசைக்கனி, சகுபா் சாதிக், அனீஸ்பாத்திமா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 4 போ் ராமநாதபுரம், மதுரை தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினரை மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் சந்தித்து வியாழக்கிழமை ஆறுதல் கூறினா்.

இந்த விபத்து குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.