ராமேசுவரத்தில் 1,000 பனை விதைகள் நடவு

Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 1,000 பனை விதைகளை வியாழக்கிழமை நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.ராஜேஷ் தலைமை வகித்து, பனை விதைகள் நடவைத் தொடங்கிவைத்தாா்.

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் 1,000 பனை விதைகளை மாணவா்கள் நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் செல்வக்குமாா், இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா் தினகரன், தொழில்கல்வி ஆசிரியா் பழனிச்சாமி, முதுநிலை ஆசிரியா் பாலமுரளி ஆகியோா் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com