கடலாடி அருகே மாட்டுவண்டிப் போட்டி
கடலாடி அருகே வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்த ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வில்வநாதன் நொண்டி கருப்பண்ணசுவாமி கோயில் 19-ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவையொட்டி, சின்ன மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 மாட்டு வண்டிகள், பந்தய வீரா்கள் கலந்து கொண்டனா். கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவு எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டிகளுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
