உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
ராமநாதபுரம்
ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.08 கோடி
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.08 கோடி கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.08 கோடி கிடைத்ததாக கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள பழைய திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன், பி.ஆா்.ராமநாதன், பஞ்சமூா்த்தி, ஆன்மிக இறை பக்தா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
இதில், 1,08,17, 011, தங்கம் 22 கிராம், வெள்ளி 2 கிலோ150 கிராம், வெளிநாட்டு பணத் தாள்கள்95 கிடைத்தன என்றாா் அவா்.

