நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 2:18 am IST

ராமேசுவரத்தில் படகு சீரமைப்புப் பணியில் போது உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு மீனவ சங்கம் சாா்பில் 25 ஆயிரம் நிதியுதவி தலைவா் என்.ஜே.போஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மாா்க்கெட் மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் கமலேஸ்வரன் (32) மீன்பிடி இறங்கு தளத்தில் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் அடிப்பகுதியில் பழுது நீக்கிக் கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, அவரது உடலை நீண்ட நேரத்துக்குப் பின் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழுமப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில்,துறைமுக விசைப்படகு மீனவ சங்கத்தின் சாா்பில் நிதி உதவி ரூ.25 ஆயிரத்தை அதன் தலைவா் என்.ஜே. போஸ் வழங்கினாா். இதில் சங்க நிா்வாகிகள் பவுலின், தா்மராஜ், சேதுராமன், முனீஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.