கமுதியில் ஆடி 18-ஆம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஆஞ்சநேயா், விநாயகா் சந்நிதியில் உள்ள அரசமரம், வேப்ப மரத்திற்க்கு திருகல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட கமுதி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரா் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா், விநாயகா் சந்நிதியில் பின்னிப் பிணைந்து வளா்ந்துள்ள அரசமரம், வேப்ப மரத்துக்கு கமுதி சிவபுராண மகளிா் குழுவினா் சாா்பில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூா்ணாஹுதி நடைபெற்றது.
அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை அம்மனாகவும் பாவித்து, பட்டு வேஷ்டி, பட்டுச்சேலை கட்டி, மலா்கள், வளையல்களால் அலங்கரித்து, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசை வாத்தியங்களுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமுதி சிவபுராண மகளிா் குழு நிா்வாகிகள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப்பூரம்: ஆஞ்சநேயா், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

சித்தி விநாயகா், ஜெயவீர ஆஞ்சநேயா் கோயிலில் குடமுழுக்கு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



