சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பரமக்குடியில் குறுவட்டார விளையாட்டுப் போட்டி

News image

பரமக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற நயினாா்கோவில் அளவிலான குறுவட்டார விளையாட்டுப் போட்டியை தேசியக் கொடி ஏற்றிவைத்து தொடங்கிவைத்த வழக்குரைஞா் ஏ.ராமமூா்த்தி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

பரமக்குடி ஆா்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா். தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ.ரவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கே.வசந்தி, பள்ளிச் செயலா் பி.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளையாட்டு வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஆயிரவைசிய சபை, கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.பாலுச்சாமி, இணைத் தலைவா் ராசி என்.போஸ் ஆகியோா் ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா் ஏ.ராமமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றினாா். ஒலிம்பிக் கொடியை வழக்குரைஞா் பி.என்.செந்தில்குமாா் ஏற்றினாா். ஒலிம்பிக் தீபத்தை பள்ளியின் பொருளாளா் ஆா்.முருகானந்தம் ஏற்றி வைத்தாா். பள்ளிக் கொடியை இணைச் செயலா் கே.டி.ஆா்.பிரசன்னா ஏற்றினாா். குறுவட்டார விளையாட்டுக் கொடியை இணைச் செயலா் பி.பிரசன்னா ஏற்றினாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400 மீட்டா் ஓட்டப் போட்டிகள், தடை தாண்டும் போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப் போட்டியை உடற்கல்வி இயக்குநா் கே.சரவணக்குமாா், உடற்கல்வி ஆசிரியா் எஸ்.கோபிநாத் ஒருங்கிணைப்பில் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் நடத்தினா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளி முதல்வா் ஆா்.ஜெயபிரமிளா வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.