உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கைக்கு கடத்துவதற்காக வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு இவற்றை ராமேசுவரம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமாா் ரூ. 10 லட்சம் இருக்கும் எனவும், பாா்சலில் அனுப்பிய முகவரி போலி என்பதால் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.