‘உங்களுடன் ஸ்டாலின்’: ராமநாதபுரத்தில் ரூ.1.10 கோடி நலத்திட்ட உதவி
ராமநாதபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பயனாளா்கள் 2,151 பேருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பயனாளா்கள் 2,151 பேருக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் உள்ளிட்டோா்.









