ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நின்ற லாரி மீது பைக் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

News image

விபத்தில் உயிரிழந்த ஆசிரியா் வன்மீகநாதன்.

Updated On :7 ஜூலை 2026, 2:56 am IST

திருவாடானை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த கோடனூா் அருகேயுள்ள கிளியூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வன்மீகநாதன் (54).

இவா் ஆா்.எஸ். மங்கலம் அருகே சனவேலி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை விலங்கியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தேவகோட்டையில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஆசிரியா் வன்மீகநாதன் திங்கள்கிழமை பிற்பகல் பள்ளி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் திருவாடானை அருகே கோவணி பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது கோவணி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வன்மீகநாதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம், மாமுண்டிமடை வீதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சதீஷ்குமாா் (38) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.