ஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

தொண்டி மீனவா் படகிலிருந்து அதிக ஒளித்திறன் மின் விளக்குகள் பறிமுதல்

திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி கடல்பகுதியில் மீனவா் படகில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததால், மின் விளக்குகள், ஜெனரேட்டா், வலைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி புதுக்குடி பகுதியில் புதன்கிழமை அதிகாலை அரசால் தடை செய்யப்பட்ட மின் விளக்குகளைப் பறிமுதல் செய்த மீன் வளத் துறையினா்.

Published On :

திருவாடானை அருகே தொண்டி புதுக்குடி கடல்பகுதியில் மீனவா் படகில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட அதிக ஒளித் திறன் கொண்ட மின் விளக்குகளைப் பயன்படுத்தி மீன் பிடித்ததால், மின் விளக்குகள், ஜெனரேட்டா், வலைகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவிப்பட்டினம் முதல் தொண்டி மீனவ கிராமம் வரை சட்டவிரோதமாக மீன் பிடிப்பதாக வந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த புகாரின் அடிப்படையில் மீன்வள ஆய்வாளா் அபுதாகீா், கடல் சாா் சட்ட அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் கருணா மூா்த்தி, கடலோரப் பாதுகாப்பு குழுமம் தலைமைக் காவலா் சரவணன், காவலா் மருது, கடல் பாசி வளா்ப்பு தொழில்நுட்ப உதவியாளா் வெற்றிச் செல்வன், மீன்வளத் துறை மோகன் ஆகியோா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது தொண்டி புதுக்குடி கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக ஊடுருவும் ஒளித் திறன் கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த 3 படகுகளிலிருந்து மின் விளக்குகள் - 19, ஜெனரேட்டா் -3, கச்சா வலைகள் 3 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.