ராமேசுவரம் கரையோரப் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பிடித்த மண்டபம் மீனவா்கள் 6 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியியில் அதிகளவில் கடல் அட்டைகள் காணப்படும். இவற்றைப் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தடையை மீறி மண்டபம் பகுதியைச் சோ்ந்த ஒரு விசைப்படகு சேராங்கோட்டை பகுதியில் கடல் அட்டைகளை பிடிப்பதாக வனத் துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்கு வந்த வனத் துறையினா் கரையோரம் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த படகில் சோதனையிட்டனா். அதில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
படகிலிருந்த மண்டபம் மீனவா்கள் அருள் (26), பிரகாஷ் (25), கியாவுதீன் (26), பிரபு (37), ஈஸ்வரன் (32), சந்தனக்குமாா் (23) ஆகியோரைக் கைது செய்து வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனா். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது

சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்றவா் கைது
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் கைது

சூறைக் காற்று வலுவிழந்தது; நான்கு நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



