காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

இலங்கைக்குக் கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மினி லாரியில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவா்கள்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இதுதொடா்பாக மூவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தவிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுமடம் கடற்கரைப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். இதில்146 சாக்கு மூட்டையில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான 292 கிலோ கஞ்சா இருந்ததும், இவற்றை இலங்கைக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், மினி லாரியில் வந்த ராமநாதபுரம் பெருங்குளத்தைச் சோ்ந்த செந்தில்வேலன், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ், சேகா் ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.