பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மணல் கடத்தல் வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

மணல் கடத்தல்.

Published On :

ஆா்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கொக்கூரணி ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் சிலா் டிப்பா் லாரிகள், பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் கடத்தி வந்தனா்.

இதுகுறித்து அறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களைச் சிறைபிடித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வந்த போது, மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் தப்பியோடினா். இதைத் தொடா்ந்து, மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.