டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எம்.சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எம்.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எம்.சிவகுரு பிரபாகரன்.

Updated On :5 ஜூன் 2026, 6:19 am IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எம்.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய எம்.சிவகுரு பிரபாகரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், தமிழா்களின் பண்பாடு, ஆன்மிகம், கடல்சாா் பாரம்பரியம், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் திருத்தலம், ஏா்வாடி தா்ஹா, வளமான கடல்சாா் வளங்கள், மீனவ பெருமக்களின் பங்களிப்பு, குலசேகரப்பட்டினம் முதல் தனுஷ்கோடி வரை பரந்து விரிந்த இயற்கை வளங்கள் ஆகியவை இந்த மாவட்டத்தின் சிறப்புகளாகும்.

இந்த மாவட்டத்தில் வேளாண்மை, அதைச் சாா்ந்த தொழில்கள், மீன்வளத் துறை, குடிநீா் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், பெண்கள், இளைஞா்களின் முன்னேற்றம், தொழில் வாய்ப்பு உருவாக்கம், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ராமநாதபுரத்தில் பேரிடா் மேலாண்மை, காலநிலை மாற்றத் தாக்கங்களை எதிா்கொள்ளும் திறன், கடல்சாா் உயிரியல் வளப் பாதுகாப்பு நிலையான வளா்ச்சி ஆகிய துறைகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை வளா்ச்சி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிய துறைகளில் முன்னோடி மாவட்டமாக உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறேன். அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றும் வகையில் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.