நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தொண்டி சந்தையில் கெட்டுப் போன 55 கிலோ மீன்கள் பறிமுதல்

News image

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 1:42 am IST

திருவாடானை அருகேயுள்ள தொண்டி தினசரி மீன்கள் விற்பனை சந்தையில் மீன் வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுமாா் 55 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனா்.

உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப் பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் ஆகியோா் இணைந்து தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்றனரா, கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகின்றனவா என சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சுமாா் 55 கிலோ அளவுக்கு கெட்டுப் போன மீன்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அதிகாரிகள் அழித்தனா். இதையடுத்து, கெட்டுப் போன, ரசாயனம் கலந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

  தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

தொண்டி மீன்கள் விற்பனை சந்தையில் சனிக்கிழமை சோதனையிட்டு கெட்டுபோன மீன்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், மீன் வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், கடலோர அமலாக்கப்பிரிவு காவலா்கள் கருணாமூா்த்தி, காதா் இபுராஹிம் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.