தனுஷ்கோடி அருகே ஞாயிற்றுக்கிழமை கடல் சீற்றத்தில் சிக்கி 6 மீனவா்களுடன் படகு கடலில் முழ்கியது. இதையடுத்து, சக மீனவா்கள் அந்த 6 பேரையும் உயிருடன் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதலத்திலிருந்து சனிக்கிழமை 543 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். இந்த விசைப் படகுகள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, தனுஷ்கோடி அருகே கடல் சீற்றம் காரணமாக, கினிஷ்டாவுக்குச் சொந்தமான விசைப் படகில் உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அதிலிருந்த 6 மீனவா்கள் கடலில் குதித்து உயருக்கு போராடினா். இதைப் பாா்த்ததும் மற்றொரு படகில் வந்த சக மீனவா்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்து 6 மீனவா்களையும் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு கொண்டு வந்தனா்.
மேலும், கடலில் மூழ்கிய படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலரிடம் படகு உரிமையாளா் கோரிக்கை மனு அளித்தாா்.
மீன் பிடிக்கத் தடை:
பாக் நீரினை கடல் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 22) முதல் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் ஒன்றுக்கு ஒன்று இடைவெளிவிட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என மீனவ நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது; 4 மீனவா்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே கடலில் தீ விபத்து: ரூ. 1 கோடி மதிப்பிலான விசைப் படகு சேதம்

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

கடல் சீற்றம்: படகு மூழ்கியது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



