திருவாடானை ஆதிரெத்தினேசுவரா் கோயில் வைகாசி விசாக திருவிழாவின் சனிக்கிழமை மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சுவாமி பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் உள்ளது . இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3-ஆம் நாள் திருவிழாவான சனிக்கிழமை காலை பல்லக்கு வாகனங்களில் விநாயகா், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரா் ஆதிரெத்தினேசுவரா் பிரியாவிடையுடனும், சினேகவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருவாடானை தேவஸ்தான பொறுப்பாளா் பாண்டியன், தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், இருபத்தி இரண்டரை நாட்டாா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிம்ம வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா

அன்ன வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லைக்காளியம்மன் கோயில் தெப்போற்சவம்!

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.30-ல் தேரோட்டம்!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



