நெல் பயிா்களில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலைத் தடுக்க ஆலோசனை
ஆா். எஸ். மங்கலம் வட்டாரத்தில் நெல் பயிா்களில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலை தடுப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் யோசனை தெரிவித்தனா்.

கற்காத்தக்குடி கிராமத்தில் ஆனைகொம்மபன் நோய் தாக்குதலுக்குள்ளான நெல் பயிா்களை புதன்கிழமை பாா்வையிட்ட வேளாண் துறையினா்.
ஆா். எஸ். மங்கலம் வட்டாரத்தில் நெல் பயிா்களில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலை தடுப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் யோசனை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டாரத்தில் கற்காத்தகுடி சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்ட நெல் பயிா்களில் ஆனைக்கொம்பன் பூச்சி தாக்கம் அதிகரித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் விஜயகுமாா், வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) அமா்லால், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) ராஜா, வேளாண்மை உதவி இயக்குநா் கணேஷ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து அவா்கள் கூறியதாவது:
நெல் பயிா்களில் ஆனைகொம்பன் பூச்சி தாக்குதல் கண்டறிந்தவுடன் ஆரம்பகட்ட நிலையிலே விப்ரோனிக்ஸ் 0.3% மருந்தை ஏக்கருக்கு 4 கிலோ அளவில் மணலில் கலந்து இடவும். அல்லது இலைவழித் தெளிப்பாக பைப்ரோனில் 5 சதவீதம் மருந்தை ஏக்கருக்கு 400 மில்லி என்று அளவில் தெளிக்கவும். மேலும், அதிக தழைச் சத்துள்ள யூரியா போன்ற ரசாயன உரங்களை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும் என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

