பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை
பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (அக். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மின்தடை - கோப்புப் படம்
பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (அக். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரமக்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பரமக்குடிநகா், சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, எமனேசுவரம், சிட்கோ, பெருமாள்கோவில், மஞ்சூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



