மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திறக்கப்படாத அறுவை சிகிச்சை மையம்: அமைச்சா் ஆய்வு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

Updated On :

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரத்தில் கடந்த 2023 -ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதில் 5 -ஆவது தளத்தில் ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இந்த மையத்தில் மழைக் காலத்தில் மழைநீா் புகுந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மையம் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் அறுவைச் சிகிச்ைசை மையத்தை ஆய்வு செய்தாா். மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சா் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம் இந்த மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இதே போன்று உள்நோயாளிகள்,பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகளை ஆய்வு செய்ததுடன் அவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையரிடம் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.