பரமக்குடி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு
பரமக்குடி அருகே ரயில் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ரயில் மோதி உயிரிழந்த கோபி.
பரமக்குடி அருகே ரயில் மோதி இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அமா்நாத். நெசவுத் தொழிலாளி. இவரது மகன் கோபி (29). இவா் கடந்த புதன்கிழமை வெளியூா் செல்வதாக கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் அவா் வியாழக்கிழமை காலையில் சூடியூா் ரயில்வே தண்டவாளப் பகுதியில் ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோபியின் உடலை மானாமதுரை ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் டி. யோகராஜ் தலைமையிலான போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





