வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிவகங்கையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :25 டிசம்பர் 2018, 6:17 am IST

சிவகங்கை மாவட்ட நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்  மனோகரன் முன்னிலை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் செல்லப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர்  அழகேசன், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், தற்காலிக பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  
ஆர்ப்பாட்டத்தில் நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பொருளாளர் செல்வக்குமார் உள்பட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.