2018 - 2019 ஆம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஜூன் 30-ஆம் தேதி இந்த கலந்தாய்வு தொடங்கியது. இதற்கு ஆன்லைன் மூலம் 12,021 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 11,164 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
கலந்தாய்வின் முதல் நாளில், சிறப்பு ஒதுக்கீடான விளையாட்டுப் பிரிவு மாணவர்களில் 20 பேரில் 16 பேரும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 30 பேருக்கு 24 பேரும், மாற்றுத்திறனாளிகளில் 31 பேரில் 20 பேரும் பங்கேற்று, தங்களுக்கான கல்லூரியைத் தேர்வு செய்தனர்.
அதில் லெதர் டெக்னாலஜி பிரிவில் 2 பேரும், பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் 5 பேரும், கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 132 பேரும், டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் 75 பேரும் தேர்வு செய்து, சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதி நடைபெற்ற சிவில் பாடப்பிரிவு கலந்தாய்வில் 2,150 இடங்களுக்கு 1,847 பேர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 4,800 இடங்களுக்கு 3,964 பேர் பங்கேற்றனர். ஜூலை 6 முதல் 8 ஆம் தேதி வரை எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 4,123 இடங்களுக்கு 3,390 பேர் பங்கேற்று சேர்க்கை அனுமதிக் கடிதம் பெற்றனர்.
கணித பட்டதாரிகள் பிரிவில் 12 இடங்ளுக்கு 4 பேர் மட்டுமே கலந்து கொண்டு கல்லூரியைத் தேர்வு செய்து அனுமதிக்கடிதம் பெற்றனர்.
இந்த ஆண்டு மொத்தம் 1,939 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஏ. இளங்கோ தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.8,000 கூப்பன் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேட்பாளா்களுக்கு ஆதரவாக குடும்ப வாரிசுகள்

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

