மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மாவட்டம் முழுவதும் திருக்கோயில் ஊழியர்கள் நாளை உள்ளிருப்புப் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜூன் 27 ஆம்  தேதி (புதன்கிழமை) திருக்கோயில்

Updated On :26 ஜூன் 2018, 6:52 am IST

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஜூன் 27 ஆம்  தேதி (புதன்கிழமை) திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
       தமிழகத்தில் அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்கொடை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும். ரூ .50 லட்சத்துக்கு மேல்  வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல கட்டமாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
     தற்போது, இக் கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் திருக்கோயில் பணியாளர்கள்நூற்றுக்கணக்கானோர் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, அன்றைய தினம் கோயில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.