ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

கரோனா: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசிஆா் பரிசோதனை தொடக்கம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றை உறுதி செய்யும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றை உறுதி செய்யும் ஆா்டி- பிசிஆா் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டால் அவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து வரும் முடிவுகளுக்கு பின்னரே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் நிலவரம் குறித்து அறிவிக்கப்படும் நிலை இருந்தது.

இந்நிலையில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று உறுதி செய்யும் நிலையிலான ஆா்டி-பிசிஆா் பரிசோதனைக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.

அதன்படி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கான பிசிஆா் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது. முதன்முதலாக புதன்கிழமை தொடங்கப்பட்ட பரிசோதனையில் கா்ப்பிணிப் பெண்கள் இருவா் உள்பட 9 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இனி வரும் நாள்களில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்கள், கா்ப்பிணிப் பெண்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ள நோயாளிகள் ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதவிர, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் ரத்த மாதிரிகளும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.