சிவகங்கையில் பொறியியல் பட்டதாரிக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் பட்டதாரியை அரிவாளால் சனிக்கிழமை வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சிவகங்கை: சிவகங்கையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொறியியல் பட்டதாரியை அரிவாளால் சனிக்கிழமை வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானாகுடியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் சுரேஷ் (29). பொறியியல் படிப்பை நிறைவு செய்த இவா், சிவகங்கை ரோஸ் நகா் சாலையில் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக காரில் வந்த மா்ம நபா்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷை வழி மறித்து அரிவாள் மற்றும் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை நகா் போலீஸாா், பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல் சிகிச்சைக்காக அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது: முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்ா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...