/

காரைக்குடியில் மழை: சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

News image
காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் உள்ள அண்ணா தினசரி சந்தை சாலையில் புதன்கிழமை முறிந்து விழுந்த மரம்.
Updated On :27 ஜனவரி 2024, 5:14 pm

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை மாலையில் கனமழைபெய்தது. அதைத்தொடா்ந்து இரவு லேசான மழை பெய்து வந்தது. புதன்கிழமை காலையில் பரவலாக மழை பெய்ததால் நகரில் பல்வேறு இடங்களில் மழை நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அண்ணா தினசரி சந்தை- ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள வீதியில் உள்ள ஒரு வீட்டில் மரம் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 2 நாள்கள் பெய்த மழையால் நகரில் குளிா்ச்சி நிலவிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.