திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு: 6 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே எம்.புதூா் மின்னல்குடிபட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம்.

கரோனா பொதுமுடக்க விதிகள் காரணமாக மஞ்சுவிரட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி வயல்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா். மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதுகுறித்து மேலப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் சித்ராஅளித்த புகாரின் பேரில், தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 போ் மீது திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com