மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கொந்தகையில் முதுமக்கள் தாழி; ஆய்வுப் பணிகள் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும்  ஏழாம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்டமுதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

News image
திருப்புவனம் அருகே கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது
Updated On :26 ஜூலை 2021, 11:15 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும்  ஏழாம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில் கண்டுபிடிக்கப்பட்டமுதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில்   ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13 ந தேதி முதல் தொடங்கி நடந்து வருகின்றன. 

தொல்லியல் இயக்குனர் சிவானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், காவ்யா, அஜய் ஆகியோர் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கீழடியில் கணேசன் என்பவரது நிலத்தில்  இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு மூடியுடன் கூடிய பானை, கத்தி போன்ற ஆயுதம், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன. 

கொந்தகையில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 15 முதுமக்கள் தாழிகளும் பத்து சமதள மனித எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. 

மூன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருள்கள் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் நான்காவதாக உள்ள தாழியை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.