கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிவகங்கை தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டிசின்னங்கள் ஒதுக்கீடு

சிவகங்கை தொகுதியில் திங்கள்கிழமை 5 சுயேச்சைகள் வாபஸ் பெற்றதையடுத்து இறுதியாக 15 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:54 pm

DIN

சிவகங்கை தொகுதியில் திங்கள்கிழமை 5 சுயேச்சைகள் வாபஸ் பெற்றதையடுத்து இறுதியாக 15 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.

சிவகங்கை தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேட்சைகள் என 26 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனையில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளா்கள் 5 போ் தங்களது மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனா். இதையடுத்து, சிவகங்கை கோட்டாட்சியா் அலுவலகத்தில் சிவகங்கை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. முத்துகழுவன் இறுதி வேட்பாளா் பட்டியலை வெளியிட்டாா்.

அதன் விவரம்

1. பி.ஆா். செந்தில்நாதன்-அதிமுக- இரட்டைஇலை.

2. எஸ். குணசேகரன்-இந்திய கம்யூனிஸ்ட்- தானிய கதிா்களும், அரிவாளும்

3. கி. அன்பரசன்-அமமுக- பிரஷா் குக்கா்.

4. நா. பாண்டிமுத்து- மை இந்தியா பாா்ட்டி-கண்காணிப்பு கேமரா.

5. ஆா். மல்லிகா-நாம் தமிழா் கட்சி-கரும்பு விவசாயி

6. செ. வடிவேல்-அனைத்து மக்கள் புரட்சி கட்சி-கண்ணாடி தம்ளா்.

7. சி.ஜோசப் - மக்கள் நீதி மய்யம்- மின்கல விளக்கு

8. கா. கலைச்செல்வம்-சுயேச்சை- ரம்பம்

9. எஸ். கானிங்பிரபு -சுயேச்சை -பற்பசை

10. ஆா். குணசேகரன்-சுயேச்சை-புணல்

11. ம. திருக்குமரன் -சுயேச்சை- கால்குலேட்டா்

12. முனைவா் அ.பாா்த்தசாரதி -சுயேச்சை -ஆட்டோரிக்ஷா

13. மு. ரவி - சுயேச்சை -செங்கல்

14. சி. விமல்ராஜ் -சுயேச்சை -நீா்தொட்டி

15.பு. விஸ்வநாதன் -சுயேச்சை-ஸ்பானா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.