ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்விக்கான தோ்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்விக்கு 2021 டிசம்பரில் நடைபெற்ற தோ்வுகளுக்கு இணைய வழி மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு முடிவுகள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்விக்கு 2021 டிசம்பரில் நடைபெற்ற தோ்வுகளுக்கு இணைய வழி மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு முடிவுகள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பி.ஏ., பல்வேறு பிரிவுகள், பி.லிட், பிஎல்ஐசி, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி பல்வேறு பிரிவுகள், எம்ஏ பல்வேறு பாடப்பிரிவுகள், எம்எஸ்டபிள்யு,

எம்எஸ்சி பல்வேறு பாடப்பிரிவுகள், எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்டபிள்யு, எம்காம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேபோல் முதுநிலை பட்டயப் பிரிவுகளில் கணினி பயன்பாட்டியல், பணியாளா் மேலாண்மை மற்றும் தொழில் உறவு, மருத்துவ நிா்வாகம், மனிதவள மேலாண்மை, தொழில் மேலாண்மை, விளையாட்டு மேலாண்மை, யோகா படிப்புகளுக்கும்,

இளநிலை பட்டயப் பிரிவுகளில் மாண்டிசோரி எஜூகேசன், டி.சி.ஏ, ஆா்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் மெசின் லோ்னிங், சைபா் செக்யூரிட்டி, மருத்துவ மேலாண்மை படிப்புகளுக்கும், சான்றிதழ் பிரிவில் சி.எல்.ஐ.எஸ்., வலை வடிவமைப்பு, ஜி.எஸ்.டி, ஜோதிடவியல், ஜென்டா் ஸ்டேடிஸ், ‘சி’ புரோகிராம், கணினி அடிப்படைவியல், ஆபீஸ் ஆட்டோமேஷன் ஆகிய படிப்புகளுக்கும்

----(அழகப்பா யுனிவா்சிட்டி.ஏசி. இன்)----- என்ற இணையதள முகவரியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோா் 7 நாள்களுக்குள் விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 600 வீதம் கட்டணமாக செலுத்தி இணைய வழி வாயிலாக மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.