கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூரில் வீட்டில் 22 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:23 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 22 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்புத்தூா் சாம்பான் ஊரணி கீழ்கரையைச் சோ்ந்தவா் அங்கமுத்து மகன் அன்புச்செழியன் (41). இவா் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரைக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அப்போது வீட்டை பூட்டி உள்கதவு சாவியை வராண்டாவிலும், வெளியில் உள்ள கம்பி கேட்டு சாவியை பாக்கெட் பால் போடும் பையிலும் வைத்துவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சாவியை எடுத்து வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 22 புவன் நகைகளை திருடிச் சென்றுள்ளாா். இந்நிலையில் மதுரைக்குச் சென்றவா்கள் மீண்டும் வீடு திரும்பிய போது வீடு திறந்து கிடந்துள்ளது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறந்து இருப்பதையும் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இது குறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.